ADDED : செப் 19, 2025 03:32 AM
சென்னை:திருச்சியில் இருந்து மலேஷியா தலைநகர் கோலாலம்பூருக்கு, கூடுதல் விமானங்களை 'பதிக்' மலேஷியா விமான நிறுவனம், டிச.,18 முதல் இயக்குகிறது.
திருச்சியில் இருந்து மலேஷிய தலைநகர் கோலாலம்பூருக்கு, ஏர் ஏசியா விமான நிறுவனம், மூன்று சேவைகள், 'பதிக்' மலேஷியா விமான நிறுவனம் ஒரு சேவை என, தினசரி நான்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், இந்த மார்கத்தில் பயணியரின் 'டிமாண்ட்' அதிகமாக இருந்து வருகிறது. எனவே, 'பதிக்' மலேஷியா நிறுவனம் டிச.,18 முதல், கூடுதலாக ஒரு விமான சேவையை இயக்குகிறது.
மதுரை - டில்லி தினசரி விமான சேவையாக மாற்றம் மதுரையில் இருந்து டில்லிக்கு, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' நிறுவனம், விமான சேவைகளை வழங்கி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக, வாரத்துக்கு நான்கு நாள் மட்டுமே சேவைகளை வழங்கியது. பயணியர் வருகைக்கேற்ப சேவைகள் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மதுரையில் இருந்து டில்லிக்கு, நேற்று முன்தினம் முதல், தினசரி விமான சேவையாக, இந்நிறுவனம் மாற்றியுள்ளது.

