ADDED : பிப் 02, 2024 01:50 AM

சென்னை:ஆதிதிராவிட மாணவியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத, தி.மு.க., அரசை கண்டித்து, நேற்று மாவட்ட தலைநகரங்களில், அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பல்லாவரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள், வீட்டு வேலைக்காக தன்னை அழைத்து சென்று கொடுமைப்படுத்தியதாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த, ஆதிதிராவிட மாணவி போலீசில் புகார் செய்தார்.
இந்த வழக்கில், தி.மு.க., - எம்.எல்.ஏ., குடும்பத்தை சேர்ந்தவர்களை காப்பாற்றுகிற அரசை கண்டித்தும், மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி விட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், முதல்வரின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம், வள்ளுவர் கோட்டம், மின்ட் பழைய பஸ் நிலையம், சைதாப்பேட்டை பனகல் மாளிகை, தருமாபுரம் மெயின் ரோடு உட்பட, பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

