ADDED : பிப் 02, 2024 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகம், இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் சங்கர் வானவராய்:
பட்ஜெட்டில், சிறிய சுற்றுலா தலங்களின் விரிவான வளர்ச்சியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆன்மிக சுற்றுலா, துறைமுக இணைப்பு, வசதிகள் மற்றும் சேவைகளின் தரம் என எதுவாக இருந்தாலும், தமிழகத்திற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன.
தமிழகம், இந்திய தொழில் கூட்டமைப்பு துணை தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம்:
விவசாயம், சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு உட்பட பல்வேறு துறைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அனைவரையும் உள்ளடக்கிய மேம்பாடு, சமூக நீதி, ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றை பட்ஜெட் உரை வலியுறுத்துகிறது.
ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மீது கவனம் செலுத்துவது, நாட்டை உண்மையான வளர்ச்சி அடைந்த பாரதமாக மாற்றுவதற்கான படி.

