ADDED : ஜூன் 25, 2025 12:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : பா.ம.க., வில் தனது மகன் அன்புமணியுடன் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காணப்படாத நிலையில், ராமதாஸ் தனது 60வது ஆண்டு திருமண நாளை தனது மனைவி சரஸ்வதி மற்றும் இரண்டு மகள்கள், பேரன்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன், தைலாபுரம் தோட்டத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். ராமதாஸ் தம்பதியிடம் குடும்ப உறுப்பினர்கள் ஆசி பெற்றனர்.
விழாவையொட்டி, தைலாபுரம் தோட்டத்தில் வாழை மரங்கள் கட்டப்பட்டு, பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்து.
நிகழ்ச்சிக்கு, அன்புமணி வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கடைசி வரை வரவில்லை.