ADDED : ஜன 23, 2024 11:21 PM
அயோத்தியில், 3,200 ராமர் கோவில்கள் உள்ளன. மோடி கட்டிய ராமர் கோவில், 3,201 என்பதை தவிர, எந்த ஒரு அரசியல் மாற்றத்தையும் தராது. பா.ஜ. தான் பாபர் மசூதியை இடித்துவிட்டு, அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதாக கூறியது. ஆனால், காங்கிரஸ் தரப்பில், அயோத்தியில் எங்கே வேண்டுமானாலும், ராமர் கோவில் கட்டலாம் என்றோம். இப்போது, பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டவில்லை. 3 கிலோ மீட்டருக்கு அப்பால் கட்டி, இந்திய மக்களை திறமையாக நம்ப வைத்துள்ளனர்.
அயோத்தியில் கட்டுமான பணி முடியும் முன் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி எப்பொழுதும் அப்படி தான் செய்வார். மோடிக்கு கோவில் திறப்பதில் தரம் இல்லை என, சங்கராச்சாரியார் கூறியதால், தரையில் படுத்து அவரை மேம்படுத்திக்கொண்டார்.
ராகுல் தாக்கப்பட்டது மிகப்பெரிய சமூகவிரோத செயல். காங்கிரஸ் கோவிலுக்கு செல்லாத கட்சி இல்லை. காந்தி தான் இந்தியாவில் ராமருக்கு புகழ் சேர்த்தவர். அந்த தேதியில் தான், கோவிலுக்கு சென்றார் ராகுல். ராமர் கோவிலுக்குள் மோடி தான் செல்ல வேண்டும். மற்றவர்கள் செல்ல வேண்டாம் என்று சொன்னால், அது தீண்டாமை. ராகுலை தடுத்தவர்கள் மீது தீண்டாமை வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அங்கு பா.ஜ. அரசு இருப்பதால் முடக்கி வைத்துள்ளனர்.
- கே.எஸ்.அழகிரி,
தமிழக காங். தலைவர்.

