ADDED : ஜன 23, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : உ.பி., மாநிலம் அயோத்தியில், ராமர் கோவில் கும்பாபிேஷக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி, தமிழக பா.ஜ., சார்பில், சென்னையில் கோவில்கள், மண்டபங்கள் என, 1,284 இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன; அன்னதானமும் வழங்கப்பட்டது.
மேலும், 128 இடங்களில் எல்.இ.டி., திரை வாயிலாக ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மாநிலம் முழுதும், 20,000க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

