ADDED : ஜூன் 25, 2025 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அறிக்கை:
திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில், பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க சென்ற, ஐந்து மாத கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை, போலீசார் கொடூரமாக தாக்கி உள்ளனர்.
குற்றவாளிகளிடம் இருந்து, பாதிக்கப்பட்டோரை காக்க வேண்டிய காவல் துறையே, பாதிக்கப்பட்டோரை தாக்கினால், என்ன சொல்வது?
காவல் துறையின் மாண்பை கேள்விக்குறியாக்கும் இச்சம்பவத்தில், முதல்வர் உடனே தலையிட்டு, காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.