ADDED : ஜன 23, 2024 11:16 PM
சென்னிமலை:ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், ஈரோடு தொகுதி மகளிர் பிரதிநிதிகள் மாநாடு நேற்று நடந்தது. இதில் பங்கேற்க வந்த பா.ஜ. தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், நிருபர்களிடம் கூறியதாவது:
பெண்களின் முன்னேற்றத்தை வைத்து, மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் செய்து வருகிறார்.
ஆனால், தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் எது என்பது மக்களுக்கு புரிதல் இல்லை.
பல இடங்களில் மத்திய அரசின் அதிக நிதி கொடுக்கும் திட்டங்களில் பிரதமர் பெயரோ மத்திய அரசின் பெயரையோ பயன்படுத்தப்படவில்லை. தொடர்ந்து பிரதமர் பெயர் மறைக்கப்படுகிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின், பட்டியல் இனத்தின் மீதான தாக்குதலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளன.
சிறுபான்மை மக்களுக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர், சிறுபான்மை மத விழாக்களுக்குச் செல்லும் அமைச்சர்கள், அங்கு, ஹிந்து விழாக்கள் குறித்து கேவலமாகவும், ஹிந்து கடவுள்கள் குறித்து அவதுாறாகவும் பேசுகின்றனர். இவற்றை உள்ளடக்கியது தான் திராவிட மாடல் அரசு.
தி.மு.க. பாரம்பரியமே ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்துவது தான்.
இவ்வாறு அவர் கூறினார்.

