ADDED : ஜன 21, 2024 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : குற்றவாளிகளின் தரவுகளை தொழில்நுட்ப ரீதியில் சேகரித்து வைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்திய மூன்று போலீசாருக்கு, மத்திய அரசு பரிசு வழங்கி கவுரவித்துஉள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின், தேசிய குற்ற ஆவண காப்பகத்தால், குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் தொழில்நுட்ப ரீதியில், ஒருங்கிணைந்த குற்றவியல் நீதித்துறை அமைப்பை தமிழக காவல்துறை செயல்படுத்தி வருகிறது.
அவற்றை சிறப்பாக செயல்படுத்திய,திருநெல்வேலி எஸ்.ஐ., மார்கெரட் தெரேசா, சென்னை முதல்நிலை காவலர் ஸ்ரீரங்கன், துாத்துக்குடி முதல்நிலை காவலர் ஜான்பால் ஆகியோருக்கு மத்திய அரசு பரிசு வழங்கி கவுரவித்துள்ளது.

