ADDED : பிப் 24, 2024 12:09 AM

சென்னை:சென்னை மேயர் பிரியாவின் கார், லாரி மோதி, விபத்தில் சிக்கிய நிலையில், காயமின்றி அவர் தப்பினார்.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வேலுாரில் நடந்த லோக்சபா தேர்தல் அறிக்கை கருத்துகேட்பு கூட்டத்திற்கு சென்றிருந்தார்; நேற்று மாலை சென்னை திரும்பினார். வரும் வழியில், பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பாலம் அருகே, இரவு 8:30 மணியளவில் கார், விபத்தில் சிக்கியது.
முன்னால் சென்ற கார், எவ்வித சமிக்ஞையும் இன்றி திடீரென பக்கவாட்டில் திரும்பியது தான் காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால், அந்த காரை தொடர்ந்து சென்ற மேயர் பிரியாவின் கார், முன்னால் சென்ற கார் மீது மோதியது.
அதேநேரம், பின்னால் வந்த லாரி, மேயரின் காரின் பின் பக்கம் மோதியது. இதனால் காரின் பின் பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக மேயர் பிரியா காயமின்றி தப்பினார். இந்த விபத்தால், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் நீடித்தது.
விபத்து குறித்து, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

