சென்னை பெசன்ட் நகரில் மறைந்த நடிகர் மனோஜ் உடல் தகனம்
சென்னை பெசன்ட் நகரில் மறைந்த நடிகர் மனோஜ் உடல் தகனம்
UPDATED : மார் 26, 2025 05:41 PM
ADDED : மார் 26, 2025 01:47 PM

சென்னை: நேற்று சென்னையில் காலமான இயக்குனர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் உடல் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நடிகர் விஜய் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ், 48, நேற்று காலமானார். சென்னை சேத்துப்பட்டு வீட்டில் ஓய்வில் இருந்தபோது, நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர்பிரிந்தது.
மனோஜின் உடல் சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நடிகர் விஜய் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு மனோஜ் மகள் இறுதிச் சடங்குகளை செய்தார். தொடர்ந்து, தகனம் செய்யப்பட்டது. இதில், மனோஜின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.