sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காமெடி நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

/

காமெடி நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

காமெடி நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

காமெடி நடிகர் ரோபோ சங்கர் காலமானார்


UPDATED : செப் 18, 2025 10:25 PM

ADDED : செப் 18, 2025 09:57 PM

Google News

UPDATED : செப் 18, 2025 10:25 PM ADDED : செப் 18, 2025 09:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 46.

சில தினங்களுக்கு முன்பு காட்ஸ் ஜில்லா பட துவக்க விழா தளத்தில் ரத்த வாந்தி எடுத்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக பாதிப்பு, உணவுக்குழாய் பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர்.

தர்ம சக்கரம் படம் தொடங்கி, மாரி, இதற்குதானே ஆசைப்பட்டாய், தேசிங்குராஜா, புலி, விஸ்வாசம், இரும்புதிரை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரோபோ சங்கர்.

மதுரையை சேர்ந்த சங்கர் மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ வேடமிட்டு டான்ஸ் ஆடுவதில் பிரபலம் ஆனார். அதனால் ரோபோ சங்கர் என அழைக்கப்பட்டார். பின்னர் தனியார் டிவி காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலம் ஆனார்.

கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கர் , கதை நாயகன் ஆக நடிக்க தயாராகி வந்தார். நவம்பரில் வர உள்ள கமல்ஹாசன் பிறந்த நாளை விமர்சை ஆக கொண்டாடவும், அதை முன்னிட்டு தொடர் நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டு இருந்தார். அதற்குள் அவர் காலமாகி உள்ளார்.

2023ம் ஆண்டு அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டது. மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு, சிகிச்சை பெற்றார். வெகுவாக உடல் எடை குறைந்து பிறகு மீண்டார். மீண்டும் படங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் , சிம்பு உள்ளிட்ட பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது மனைவி பிரியங்காவும் சின்னத்திரை நடிகையாக உள்ளார். மகள் இந்திரஜா பிகில் படத்தில் விஜய் உடன் நடித்துள்ளார்.

ரோபோ சங்கர் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தார். அதற்கான பணிகள் நடந்து வந்தன. அதற்குள் அவர் காலமாகி உள்ளார். வரும் கமல்ஹாசன் பிறந்த நாளை தொடர் கொண்டாட்டமாக நடத்த இருந்தார். அதுவும் அவரின் நிறைவேறாத ஆசையாகி உள்ளது. ரோபோ சங்கரின் மறைவுக்கு நடிகர் கமல் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரோபோ சங்கர் உடல் சென்னை வளசரவாக்கம் வீட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. நாளை இறுதி சடங்கு நடக்கிறது.

ரோபோ சங்கர் மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசைசவுந்தரராஜன், மற்றும் மாநில பா.ஜ.,தலைவர் நயினார் நாகேந்திரன் உளளிட்ட அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரவித்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us