Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/சட்டமன்ற தொகுதிவாரியாக கணக்கெடுப்பு பணிகள்: தமிழக தேர்தல் ஆணையம்

சட்டமன்ற தொகுதிவாரியாக கணக்கெடுப்பு பணிகள்: தமிழக தேர்தல் ஆணையம்

சட்டமன்ற தொகுதிவாரியாக கணக்கெடுப்பு பணிகள்: தமிழக தேர்தல் ஆணையம்


UPDATED : ஏப் 20, 2024 10:42 PM

ADDED : ஏப் 20, 2024 07:40 PM

Follow on Google

UPDATED : ஏப் 20, 2024 10:42 PM ADDED : ஏப் 20, 2024 07:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சட்டமன்ற தொகுதிவாரியாக கணக்கெடுப்பு பணிகள் நடப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நேற்று தமிழகத்தில் நடைபெற்ற முதற்கட்ட லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் சதவீதத்தில் குளறுபடி ஏற்பட்டது. இதைடுத்து இன்று மாலை வெளியான தகவலின் படி 69.46 சதவீதம் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக தர்மபுரி லோக்சபா தொகுதியில் 81.48 சதவீதமும், மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் 53.91 சதவீதமும் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியது, தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது சட்டமன்ற தொகுதிவாரியாக கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் அலுவலர்கள் இறுதிப்படுத்தி வகின்றனர். 39 தொகுதிகளிலும் சுமூகமாக தேர்தல் நடந்துள்ளதால் எந்த தொகுதியிலும் மறு வாக்குப்பதிவு நடைபெறாது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தென்சென்னை தொகுதியில் முதலில் அறிவிக்கப்பட்டதை விட 13.55 % வாக்குகளை குறைத்து அறிவித்துள்ளது.

மத்திய சென்னையில் முதலில் அறிவித்ததை விட 13.44 % குறைத்தும், தூத்துக்குடியில் முதலில் அறிவித்ததை விட 10.97 % குறைத்தும்

வடசென்னையில் முதலில் அறிவித்ததை விட 9.13 % குறைத்தும், ஸ்ரீபெரும்புதூரில் முதலில் அறிவித்ததை விட 9.56% குறைத்தும்

சென்னையில் முதலில் அறிவித்ததை விட 8.36% குறைத்தும்,கோவையில் முதலில் அறிவித்ததை விட 6.36% வாக்குகள் குறைத்தும்

குமரியில் முதலில் அறிவித்ததை விட 4.69% குறைத்தும்,திருச்சியில் முதலில் அறிவித்ததை விட 3.79% வாக்குகள் குறைத்தும்

சிவகங்கையில் முதலில் அறிவித்ததை விட 7.11 % குறைத்தும் மதுரையில் முதலில் அறிவித்ததை விட 7.06% வாக்குகள் குறைத்தும் அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap