ADDED : ஜன 22, 2024 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு : விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்கு இன்று (ஜன.
23) முதல் ஜன. 26 முடிய 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதன்படி தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மலையேற அனுமதிக்கப்படுவர். எளிதாக தீப்பற்றும் பொருட்களையும், பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

