ADDED : ஜன 13, 2024 11:39 PM
ரேஷனில் கூடுதலாக ஒரு கிலோ உளுத்தம் பருப்பு, சர்க்கரை வழங்கப்படும் என அறிவித்து விட்டு, தற்போது ஏற்கனவே வழங்கப்படும் பொருட்களை நிறுத்த முயற்சிப்பதாக, செய்தி வந்துள்ளது. இதற்கு காரணம் கடும் நிதி நெருக்கடி என்று கூறப்படுகிறது.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், அனைத்து வரிகளும், கட்டணங்களும், பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. கடனும் அதிகமாக வாங்கப்பட்டுள்ளது.
அனைத்து வரிகளை உயர்த்தியும், கூடுதலாக கடன் வாங்கியும், கடும் நிதி நெருக்கடி என்றால், நிர்வாகத் திறமையற்ற அரசு என்று, தி.மு.க., ஒப்புக் கொள்கிறது என்றுதான் பொருள்.
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பு, பாமாயில் போன்றவற்றை நிறுத்துவது, ஏற்கக் கூடியதல்ல. இருக்கிற சலுகைகளை பறிப்பது கண்டனத்துக்கு உரியது.
கூடுதலாக உளுத்தம் பருப்பு, சர்க்கரை வழங்கப்படும் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்ற வேண்டும்.
- பன்னீர்செல்வம்,
முன்னாள் முதல்வர்.

