பழச எல்லாம் தோண்டாதீங்க இப்போ நான் தி.மு.க.,காரன் அமைச்சர் முத்துசாமி 'எஸ்கேப்'
பழச எல்லாம் தோண்டாதீங்க இப்போ நான் தி.மு.க.,காரன் அமைச்சர் முத்துசாமி 'எஸ்கேப்'
ADDED : செப் 18, 2025 02:45 AM

ஈரோடு:பழச எல்லாம் தோண்டாதீங்க; இப்போ நான் தி.மு.க.,காரன் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோடில், ஈ.வெ.ரா., சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் முத்துசாமியிடம், 'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, டில்லிக்கு சென்றது குறித்து என்ன கருதுகிறீர்கள்' என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''தெரியாது,'' என கூறி சிரித்தார்.
எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோதே, அ.தி.மு.க.,வில் அமைச்சராக இருந்தவர் என்பதால், முத்துசாமியிடம், 'தமிழக நலனுக்காக பழனிசாமி சென்றாரா; அ.தி.மு.க.,வை காப்பாற்ற சென்றாரா? அமித் ஷாவை சந்தித்துவிட்டு திரும்பும்போது, முகத்தை மூடிச் சென்றார். கைக்கூலிகளை கண்டுபிடித்து விட்டோம் என்கிறார். நீண்ட காலமாக அ.தி.மு.க.,வில் முக்கிய தலைவராக இருந்த உங்கள் கருத்து என்ன?' என, செய்தியாளர்கள் திரும்பவும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த முத்துசாமி, ''இப்போது, அந்த கட்சியில் இருக்கும் யாரையாவது பார்த்து கேளுங்கள். நான் இப்போது தி.மு.க.,காரன்; ஏங்க, பழச எல்லாம் கொண்டு வந்து தோண்டுறீங்க. அதை எல்லாம் விடுங்க. அப்பப்ப புது பிரச்னை வந்துக்கிட்டே இருக்கும்; அப்போ கேளுங்க,'' என கூறியபடி சென்றார்.

