sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போதை கலாசார கைதுகள்; தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்

/

போதை கலாசார கைதுகள்; தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்

போதை கலாசார கைதுகள்; தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்

போதை கலாசார கைதுகள்; தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்


ADDED : ஜூன் 25, 2025 02:23 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 02:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அ.தி.மு.க.,வின் தகவல் தொழில்நுட்ப அணி, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

கோகைன் போதைப்பொருள் விற்பனை செய்த விவகாரத்தில் சிக்கியிருக்கும் பிரசாத், இப்போதுதான் அ.தி.மு.க.,வில் பொறுப்பில் நியமிக்கப்பட்டது போல சொல்லி, ஒரு கருத்தாக்கத்தை கட்டமைக்க, தி.மு.க., முயற்சிக்கிறது. 2015 முதலே ஐ.டி., விங் பொறுப்பில் இருந்து வந்த பிரசாத், குற்றச்சாட்டு எழுந்ததுமே, அ.தி.மு.க.,வில் இருந்தும் நீக்கப்பட்டு விட்டார்.

தவறு செய்பவர்களுக்கு, அ.தி.மு.க.,வில் இடம் இல்லை. ஆட்சி என்ற பெயரில் நாள்தோறும் மக்களை பாடாய்ப்படுத்தும் தி.மு.க., ஆட்சியின் அவலங்களைக் கண்டு, மக்கள் முகம் சுளிக்கின்றனர். இதை மறைக்கவும், மடைமாற்றவும், தி.மு.க., - ஐ.டி., அணி அவதுாறுகளை பரப்பி வருகிறது.

பொய் கதைகளைப் புனைந்து கொண்டிருக்கும் தி.மு.க.,வினர், சர்வதேச போதை மாபியா தலைவன் தி.மு.க., அயலக அணி நிர்வாகி ஜாபர் சாதிக் என்பதை மறக்க வேண்டாம். அந்த ஜாபர் சாதிக்குடன் முதல்வரும், துணை முதல்வரும் வரிசையாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது நாடறிந்த உண்மை.

குழந்தைகளுக்கான பால் டப்பாக்களில், 2,000 கிலோ மெத் ஆம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்திய ஜாபர் சாதிக்கிற்கும், உதயமான ஒருவரின் பவுண்டேஷனுக்கும் இருந்த பணப் பரிவர்த்தனைகளுக்கு, தி.மு.க., தரப்பு என்ன பதில் வைத்துள்ளது?

போதைப்பொருள் மாபியாவுக்கு அடைக்கலம் கொடுத்து, பொறுப்பு வழங்கிக் கொண்டே, சட்டம் - ஒழுங்கு தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதாக, சினிமா வசனம் பேசுகிறார் பொம்மை முதல்வர் ஸ்டாலின். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us
      Arattai