ADDED : ஜன 23, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : 'எல்காட்' நிறுவனம் சார்பில், 2022 - 23ம் ஆண்டுக்கு, தமிழக அரசுக்கான பங்கு ஈவுத் தொகையாக 7.78 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
இதற்கான காசோலையை, நேற்று தலைமை செயலகத்தில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன், முதல்வரிடம் வழங்கினார்.
அதேபோல, சிட்கோ என அழைக்கப்படும், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், 2022 - 23ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பங்கு ஈவுத் தொகையான 8.95 கோடி ரூபாய்க்கான காசோலையை, அமைச்சர் அன்பரசன், நேற்று முதல்வரிடம் வழங்கினார்.
அப்போது, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் தீரஜ்குமார், எல்காட் மேலாண் இயக்குனர் அனீஷ் சேகர், சிட்கோ மேலாண்மை இயக்குனர் மதுமதி ஆகியோர் உடனிருந்தனர்.

