நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவேன் என்று தேர்தல் காலங்களில், பிரதமர் மோடி தெரிவித்தார். அதற்கான எவ்வித நடவடிக்கையும் இல்லை. வேளாண் உற்பத்திக்கான இடுபொருட்கள் விலை, பல மடங்குகளாக உயர்த்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கான தீர்வு குறித்து அறிவிப்பு இல்லை.
- சுவாமிமலை விமல்நாதன்,தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு தலைவர்
கடந்த 2020 முதல் டில்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் கொடுத்த வாக்குறுதிகள், நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகள், பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்த்தோம். மத்திய பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றி விட்டது.
- பி.ஆர்.பாண்டியன்,பொதுச்செயலர், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம்

