UPDATED : ஜூன் 21, 2025 10:57 AM
ADDED : ஜூன் 21, 2025 05:44 AM

மதுரை : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளி மைதானத்தில் இன்று(ஜூன் 21) நடக்கும் யோகா நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பங்கேற்றார்.
பள்ளி குழும தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகிக்கிறார். இதற்காக நேற்றிரவு 8:00 மணியளவில் மதுரை வந்த கவர்னர், வேலம்மாள் பள்ளி அருகேயுள்ள தனியார் ஓட்டலில் தங்கினார்.
இன்று காலை 7:40 மணிக்கு பள்ளி மைதானத்திற்கு சென்றார். அங்கு காலை 9:15 மணி வரை நடக்கும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று ஆசனங்களை செய்தார்.
காலை 10:30 மணிக்கு முருகபக்தர்கள் மாநாடு இடத்திற்கு சென்று அறுபடை முருகனை தரிசிக்கிறார். பின்னர் அங்கிருந்து காலை 11:00 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்கிறார்.
கவர்னர் வருகை, முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

