அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகத்தில் பங்கேற்றவர்கள் பேட்டி
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகத்தில் பங்கேற்றவர்கள் பேட்டி
ADDED : ஜன 23, 2024 11:49 PM

ஆச்சரியம் அளிக்கும் அயோத்தி
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்றதை, மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, இந்தியாவின் பல்வேறு துறைகளை சேர்ந்த, முன்னணியில் திகழும் நபர்கள் பங்கேற்றனர். அதில், நானும் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
ராமர் கோவில் அமைந்துள்ள இடம் முழுதும், 'பாசிட்டிவ் வைபரேஷன்' இருந்தது.நான் விமான நிலையத்தில் இறங்கியது முதல் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வரை, அனைத்து ஏற்பாடுகளையும், விழா ஏற்பாட்டாளர்கள் மிகச்சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
இதற்கு முன்னரும், நான் அயோத்திக்கு சென்றிருக்கிறேன். அப்போது, சிறிய வீதியில் சென்றேன். தற்போது, அதே அயோத்தி ஆச்சரியம் அளிக்கும் வகையில், பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது.
லட்சக்கணக்கான உள்ளூர் மக்கள், ராமர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்க காத்திருந்தனர். நாடு முழுதும் பல லட்சம் பேர் அயோத்தி நோக்கி வர இருந்ததையும் பார்க்க முடிந்தது. அந்த சமயத்தில், நான் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்றது, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
* என்.கே.நந்தகோபால், இயக்குனர், தி சென்னை சில்க்ஸ் குரூப் ஆப் கம்பெனிஸ்:

