ADDED : ஜன 23, 2024 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுவாகவே, அரசியல் கட்சிகளின் மாநாடு என்றால், சிலர் திட்டமிட்டு மக்கள் மத்தியில், எதிர்மறை எண்ணத்தை கிளப்பி விடுவர். ஆனால், இந்த மாநாடு அந்த எதிர்மறை எண்ணங்களை நேர்மறையாக மாற்றி இருக்கிறது.
அந்த அளவுக்கு கட்டுப்பாடு காத்து, மாநாட்டின் வெற்றிக்கு ஒத்துழைத்த இளைஞரணியினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 'இங்கே உதயநிதி மட்டுமல்ல, அனைவரும் என் மகன் தான்' என, முதல்வர் பேசியதுதான், என்னை பொருத்தவரை மாநாட்டு வெற்றியின் அளவீடு.
மாநாட்டின் வெற்றி, லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கட்டும். பாசிஸ்ட்டுகளுக்கு முடிவு கட்டி, அடிமைகளை புறந்தள்ளி, இண்டியா கூட்டணியின் வெற்றியை, முதல்வர் கரங்களில் சேர்ப்போம்.
- அமைச்சர் உதயநிதி

