ADDED : ஜூன் 15, 2025 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புல் அவுட்:
நாட்டில் உள்ள 10 கோடி இஸ்லாமிய பெண்களுக்கு, முத்தலாக் தடை சட்டத்தால் பாதுகாப்பு கொடுத்தவர் பிரதமர் மோடி.
ஆனால், தமிழகத்தில் போதையால் இளைஞர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு, சீரழிந்து வருகின்றனர்.
வக்பு திருத்த சட்டம் மூலம் ஏழை, எளிய முஸ்லிம் மக்களின் முன்னேற்றத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
கடவுள் மறுப்பு என்ற கொள்கையுடன் செயல்படும் தி.மு.க., அரசு, முருக பக்தர்கள் மாநாட்டை நடத்த விடாமல் தடுக்கிறது. அதற்காகவே, ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்து, கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்து தடை கேட்டனர்.
ஆனால், அதே தி.மு.க., அரசு தான் சமீபத்தில் பழனியில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தியது. அவர்களிடம் ஆன்மிகம், அறவழி, சமய நெறி எதுவும் கிடையாது.
வேலுார் இப்ராஹிம்,
பா.ஜ., தேசிய செயலர், சிறுபான்மை பிரிவு