ADDED : ஜன 19, 2024 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அரபி கடலின் வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி உள்ளது. இதனால், தமிழகத்துக்கு கனமழை வாய்ப்பில்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரபி கடலின் தென் கிழக்கு பகுதியில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழக பகுதிகளுக்கு கனமழை எதுவும் இல்லை.
அதேநேரம், தென் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யும். வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், வறண்ட வானிலை நிலவும்.
சென்னையில் வானம் சிறிது மேகமூட்டமாக காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

