sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வாழ்த்து கோஷம் இல்லை: ஆபாச ஆட்டம் இல்லை: கடைசி வரை கலையாத கூட்டம்: கட்சி மாநாடுகளும் முருகன் மாநாடும் ஓர் ஒப்பீடு

/

வாழ்த்து கோஷம் இல்லை: ஆபாச ஆட்டம் இல்லை: கடைசி வரை கலையாத கூட்டம்: கட்சி மாநாடுகளும் முருகன் மாநாடும் ஓர் ஒப்பீடு

வாழ்த்து கோஷம் இல்லை: ஆபாச ஆட்டம் இல்லை: கடைசி வரை கலையாத கூட்டம்: கட்சி மாநாடுகளும் முருகன் மாநாடும் ஓர் ஒப்பீடு

வாழ்த்து கோஷம் இல்லை: ஆபாச ஆட்டம் இல்லை: கடைசி வரை கலையாத கூட்டம்: கட்சி மாநாடுகளும் முருகன் மாநாடும் ஓர் ஒப்பீடு

55


ADDED : ஜூன் 25, 2025 09:03 AM

Google News

55

ADDED : ஜூன் 25, 2025 09:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்வேறு அரசியல் கட்சிகளின் மாநாடுகளில், கட்சிகளின் மெகா பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற அனுபவமிக்க மூத்த பத்திரிகையாளர் ஒருவர், முருக பக்தர்கள் மாநாடு பற்றி ஒப்பிட்டுக் கூறியது:

* லட்சக்கணக்கானோர் திரண்ட போதும் கூட்டத்தில் ஒரு ஒழுங்கு இருந்தது. பக்தர்கள் வரிசையாகவே சென்றனர். உணவு வாங்க, மேடையில் தலைவர்களுக்கு சால்வையணிவிக்க என்று யாரும் முண்டியடித்து முன்னேறவில்லை. கண்ட இடத்தில் இருந்து சாப்பிடவில்லை; அதற்கான பகுதியில் மட்டுமே அமர்ந்து சாப்பிட்டனர்.

* தலைவர்கள் பேசும்போதும், கலைநிகழ்ச்சிகள் நடக்கும்போதும் அரங்கில் கட்டுப்பாடுடன் அமர்ந்து கொண்டிருந்தனர். அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கவில்லை. நிகழ்ச்சிக்கு உள்ளே நுழைந்தவர்கள் நிகழ்ச்சி முடிந்த பிறகே வெளியேறினர்.

* நிகழ்ச்சி குறிப்பிட்ட நேரத்தில் துவங்கி குறிப்பிட்ட நேரத்தில் முடிந்தது. ஆபாச கலைநிகழ்ச்சிகள், குத்துப்பாட்டு இல்லை; மாறாக பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடந்தன.

* யாரும் மது அருந்தி தகராறு செய்யவில்லை; கோவிலுக்கு போவது போல பலரும் விரதத்துடன் பயபக்தியுடன் வந்தனர்.

* மேடையில் அறிவிப்பு செய்பவர் சொல்வதை லட்சக்கணக்கானோர் அப்படியே கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தனர். மழை துாறியபோது யாரும் அசையவில்லை. ஆனால், கட்சிகளின் மாநாட்டில் இப்படி மழை பெய்தால் அமர்ந்திருக்கும் இருக்கையை தலையில் குடை போல் துாக்கி வைப்பர்; அப்படியே நடையையும் கட்டுவர்.

* வந்திருந்த முருக பக்தர்களுக்கென தனிப்பட்ட அரசியல் இருந்தாலும், தலைவர்களை வாழ்த்தி கூக்குரல் இல்லை; கோஷம் இல்லை. அரங்கில் கூச்சல் இல்லை. தலைவர்களை வரவேற்று பேனர், பிளக்ஸ் இல்லை.

* மிக முக்கியமாக பார்வையாளர்கள் யாரையும் வாகனங்களில் அழைத்து வரவில்லை. அந்தந்த பகுதி பக்தர்கள் குழுவாக இணைந்து வாகனம் அமர்த்தி வந்திருந்தனர். சில கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் காட்ட, உள்ளூர் நிர்வாகிகள் பணம் தந்து பார்வையாளர்களை அழைத்து வருவர். இங்கு வந்தது தானாக சேர்ந்த கூட்டம்.

* பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களுக்கு அனுமதி இல்லை; மறுசுழற்சி கப்களில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. எனவே, மைதானம் எங்கும் பிளாஸ்டிக் கழிவுகளே இல்லை.

* நிகழ்ச்சி முடிந்ததும் இருக்கைகளை அடுக்கி வைத்து செல்லவும், குப்பைகளை பொறுக்கவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. எல்லோரும் அதை பின்பற்றியதால், நேற்று காலையில் மைதானம் சுத்தமாக பளிச் என, இருந்தது. ஆனால், சில கட்சிகளின் மாநாட்டு குப்பை இரண்டு நாட்கள் மைதானத்தில் கிடக்கும். உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள்தான் வந்து அகற்றுவர்.






      Dinamalar
      Follow us
      Arattai