ADDED : பிப் 01, 2024 08:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய, 1,574 சாலை பணிகளில், 343 பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, சென்னை, துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில், தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு, 250 கோடி; நிரந்தர சீரமைப்பு பணிகளுக்கு, 475 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்காலிக சீரமைப்பு பணிகளை, அடுத்த மாதத்திற்குள் முடிக்க வேண்டும். நிரந்தர சீரமைப்புப் பணிகளை, நான்கு மாத காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். காலக்கெடுவுக்குள் ஒப்பந்தப் பணிகளில், முன்னேற்றம் இல்லாவிட்டால், ஒப்பந்த விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எவ்வித தயவு தாட்சண்யம் காட்டப்படாது.
- எ.வ.வேலு,
நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்.

