கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்; தப்ப முயன்றதால் நடவடிக்கை
கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்; தப்ப முயன்றதால் நடவடிக்கை
ADDED : ஜூன் 19, 2025 09:01 AM

கரூர்: கரூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி பென்சில் தமிழரசனை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி பென்சில் தமிழரசன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. திருட்டு வழக்கில் ரவுடி பென்சில் தமிழரசனை கைது செய்ய சென்றபோது, போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.
இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் சுட்டதில் ரவுடி பென்சில் தமிழரசனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. காலில் காயமடைந்த ரவுடி தமிழரசன் கைது செய்த போலீசார் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு உள்ளது. கைது செய்ய சென்ற போது, தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.