ADDED : ஜன 13, 2024 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:டில்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் முருகன் வீட்டில், இன்று காலை 10:00 மணிக்கு பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
அதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மத்திய அமைச்சர்கள், தமிழக கவர்னர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து முக்கியஸ்தர்கள் பலரும் டில்லி சென்று விழாவில் பங்கேற்கின்றனர்.
பொங்கல் விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று டில்லி சென்றார்; விழா முடிந்து இன்று மாலை சென்னை திரும்புகிறார்.

