ADDED : ஜூன் 15, 2025 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக, அரசியலமைப்பு சட்டத்தின் மீது, பா.ஜ., தாக்குதல் நடத்தி வருகிறது.
குறிப்பாக, இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களை மையப்படுத்தி, பா.ஜ.,வினர் செயல்படுவதால், மதச்சார்பின்மையை காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியபோது, வி.சி., சார்பில் 'தேசம் காப்போம்' பேரணி நடத்தினோம்.
வக்பு சட்ட திருத்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்றாலும், உண்மையில் அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இதற்காகவே தற்போது மதசார்பின்மையை வலியுறுத்தி பேரணி நடத்தினோம்.
இவ்வாறு கூறினார்.