ADDED : ஜன 13, 2024 08:04 PM
சென்னை:காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, இரண்டாம் நிலை காவலர்களாக, 3,356 பேரை தேர்வு செய்ய, ஆகஸ்ட் 8ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இப்பணிக்கு, 41 திருநங்கையர் உட்பட, இரண்டு லட்சத்து, 81,497 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு, டிசம்பரில் நடந்தது. இதில், 83 சதவீதம் பேர் பங்கேற்றனர். எழுத்து தேர்வு முடிவுகளை வாரியம் அறிவித்து உள்ளது.
தேர்ச்சி பெற்றோர் பட்டியல், www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக, தேர்ச்சி பெற்றோரில் ஒரு பணியிடத்திற்கு, ஐந்து பேர் என, உடல் திறன் மற்றும் உடல் தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வுகளுக்கு அழைக்கப்படுவர் என்றும் வாரியம் அறிவித்து உள்ளது.

