தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ திருப்பி அனுப்பப்பட்ட உளவுத்துறை எஸ்.பி.,க்கள்

 திருப்பி அனுப்பப்பட்ட உளவுத்துறை எஸ்.பி.,க்கள்

 திருப்பி அனுப்பப்பட்ட உளவுத்துறை எஸ்.பி.,க்கள்

5


ADDED : மே 09, 2026 01:47 AM

Follow on GoogleFavourite on Google

5

ADDED : மே 09, 2026 01:47 AM


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: உளவுத் துறைக்கு நியமிக்கப்பட்ட இரண்டு எஸ்.பி.,க்கள், மீண்டும் அவர்கள் பணிபுரிந்த பழைய இடத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைய இருப்பதால், அதற்கான பதவி ஏற்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, அரியலுார் மாவட்ட எஸ்.பி., விஸ்வேஷ் பாலசுப்பிரமணியன் சாஸ்திரி, கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., அரவிந்த் ஆகியோர், மாநில உளவுத் துறைக்கு சிறப்பு பணியாக நியமிக்கப்பட்டனர்.

இதற்கான உத்தரவை, தேர்தல் கமிஷனால் டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்ட சந்தீப்ராய் ரத்தோட் பிறப்பித்து இருந்தார்.

அதேபோல, த.வெ.க., தலைவர் விஜய் வீட்டில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள, வேலுார் டி.ஐ.ஜி., தர்மராஜனும் சிறப்பு பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆனால், புதிதாக நியமிக்கப்பட்ட இரண்டு எஸ்.பி.,க்களையும், தற் போது உளவுத்துறை டி.ஜி. பி.,யாக உள்ள பாலநாகதேவி ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

'என்னிடம் ஆலோசனை கேட்காமலும், உள்துறை ஒப்புதல் இன்றியும், முறையற்ற வகையில் இரண்டு எஸ்.பி.,க்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்' என கவர்னருக்கும் தலைமைச் செயலருக்கும் பாலநாகதேவி கடிதம் எழுதி உள்ளார்.

இதையடுத்து, விஸ்வேஷ் பாலசுப்பிரமணியன் சாஸ்திரி மற்றும் அரவிந்த் ஆகியோர், மீண்டும் அவர்கள் பணிபுரிந்த மாவட்டங்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.

வேலுார் டி.ஐ.ஜி., தர்மராஜனும் சிறப்பு பணியில் இருந்து விலக்கப்பட்டார். ஆனால், அவர், வேலுாருக்கு செல்லாமல் விடுமுறையில் இருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us