ADDED : செப் 18, 2025 03:58 AM
சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலை தும்பை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயவேல், 40; தனியார் பள்ளி டிரைவர். இவரது வீட்டின் அருகே கடந்த 10 நாட்களாக வெளியூரைச் சேர்ந்த 2 தம்பதிகள் தங்கி, அம்மி, கிரைண்டர் கற்களை செதுக்கும் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 6ம் தேதி தனது வீட்டில் உள்ள அம்மி, உரல் கற்களை செதுக்கி தர கூறி வீட்டிற்கு வெளியூர் தம்பதியை ஜெயவேல் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அடுத்த சில நாட்களில் அம்மி, உரல் கற்கள் செதுக்கும் தம்பதிகள் வெளியூர் சென்று விட்டனர். இந்நிலையில் ஜெயவேல் நேற்று பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த ரூ. 6 லட்சம் பணம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக அம்மி, உரல் கற்கள் செதுக்கும் மர்ம நபர்கள் மீது சந்தேகம் இருப்பாக கூறி சங்கராபுரம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சுமதி, சப்இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

