சேலம் இளைஞர் அணி மாநாடு நமத்து போன மிக்சர்: அண்ணாமலை
சேலம் இளைஞர் அணி மாநாடு நமத்து போன மிக்சர்: அண்ணாமலை
ADDED : ஜன 23, 2024 11:18 PM
திருச்சி:''கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்றது யார்?'' என்று, பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
திருச்சி விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:
அ.தி.மு.க.,வுக்கு ஒரே ஒரு எம்.ஜி.ஆர். போல், காங். கட்சிக்கு ஒரே ஒரு காமராஜர் போல, பா.ஜ.வுக்கு ஒரே ஒரு மோடி தான். மோடியைப் போல் இன்னொருவரை உருவாக்க முடியாது. அ.தி.மு.க.வின் கே.பி.முனுசாமி இதை புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டே கட்சி தான் இருக்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். அவர்களுக்கு இடையே யார் பெரியவர் என்ற பங்காளி சண்டை நடக்கிறது.
தி.மு.க., இளைஞரணிமாநாட்டில், தங்கை கொடியேற்ற, அண்ணன் ஸ்டாலின் மகிழ, அவர் மகன் துதி பாட, மட்டன் பிரியாணியுடன் இனிதாக நடந்து முடிந்துள்ளது. அந்த மாநாடு, நமத்து போன மிக்சர் தான்.
மாநாட்டில், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 1980களில், கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்றது யார்?
அதன்பின் தி.மு.க. காங்கிரசுடன் பலமுறை கூட்டணி வைத்திருந்தும், வாய் திறக்கவில்லை. பல்கலை துணைவேந்தராக முதல்வர் இருக்கக்கூடாது என்று, கடந்த, 1996ல் அன்பழகன் சட்டசபையில் பேசியுள்ளார்.
இளைஞர் அணி மாநாட்டில் நடந்த ஒரே ஒரு நல்ல விஷயம், நீட்டிற்கு எதிராக தி.மு.க.வினர் வாங்கிய கையெழுத்து அட்டைகள், அங்குள்ள குப்பையில் நிரம்பி இருந்தன.
உதயநிதி கூறுவது போல, கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைந்தால், ஊழல் ஊற்றெடுக்கும்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

