ADDED : ஜன 19, 2024 07:32 AM

நெய்வேலி: என்.எல்.சி., இந்தியா நிறுவனத்திற்கு, மிகவும் மதிப்புமிக்க, 'ஸ்கோப் எமினென்ஸ்' விருது வழங்கப்பட்டது.
மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் உயரிய அமைப்பான 'ஸ்கோப்' சார்பில் ஆண்டுதோறும் சிறந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருது, முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான குழுவால், மதிப்பிடப்படுகிறது.
பொதுத்துறை நிறுவனங்களின் சிறந்த சாதனைகள், நிறுவன வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த தேசிய பொருளாதாரத்தில் ஆற்றிய பங்களிப்புக்காக இவ்விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா நேற்று புதுடில்லியில் நடந்தது. துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தலைமை தாங்கினார். டிஜிட்டல் மாற்றத்திற்கான பிரிவில், என்.எல்.சி., நிறுவனம் சாதனை புரிந்தமைக்காக 'ஸ்கோப் எமினென்ஸ்' விருது வழங்கப்பட்டது.
விருதினை, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வழங்க, என்.எல்.சி., திட்டங்கள் மற்றும் செயலாக்கத்துறை இயக்குநர் மோகன் ரெட்டி, முதன்மை பொதுமேலாளர் சாலமன் லுாதர்கிங் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

