ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை
ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை
ADDED : ஜூன் 25, 2025 11:53 AM

சென்னை: ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது என ரயிலில் சென்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை: இந்திய ரயில்வே என்பது ஏழை, நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! இன்று காட்பாடி செல்ல ரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன்.
வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள ரயில் கட்டணங்களும், குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை மக்கள் சார்பாக நான் நான் கேட்டுக்கொள்வது, ஏ.சி., பெட்டிகளை உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். ரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம்.
ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்திய ரயில்வே வெறும் சேவை மட்டுமல்ல. அது ஒரு குடும்பம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.