ADDED : செப் 24, 2025 04:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அறிக்கை:
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், 25 லட்சம் புதிய இலவச சமையல் காஸ் சிலிண்டர் இணைப்புகளை வழங்க, பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசு முடிவு செய்துள்ளது வரவேற்புக்குரியது.
இந்த புதிய இலவச எரிவாயு இணைப்புகளின் வாயிலாக, மேலும், பல லட்சம் மகளிரின் உடல்நலம் காக்கப்பட்டு, அவர்களின் நேரமும் மிச்சப்படுத்தப்பட்டு, பல ஆயிரக்கணக்கான ஏழை குடும்பங்களின் வாழ்வும் முன்னேறும் என்று நினைக்கையில் மகிழ்ச்சி அளிக்கிறது.
ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்தை தொடர்ந்து, இத்தகைய தீபாவளி பரிசை, தேச மக்களுக்கு வழங்கியுள்ள மோடிக்கு நன்றி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

