செங்கோட்டையனுக்கு ஜெ., ஆன்மா தோல்வி தரும் ஜெ., ஆன்மா தோல்வி தரும் உதயகுமார் சாபம்
செங்கோட்டையனுக்கு ஜெ., ஆன்மா தோல்வி தரும் ஜெ., ஆன்மா தோல்வி தரும் உதயகுமார் சாபம்
ADDED : செப் 11, 2025 02:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ம துரை:அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர், உதயகுமார் அளித்த பேட்டி:
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் ஏதாவது குழப்பம் ஏற்படுத்த முடியுமா என முதல்வர் ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அதற்கு, சிலர் இரையாகி, 'பிரச்னை உள்ளது; பிளவு உள்ளது' என மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.
பழனிசாமியின் பிரசாரத்தை பார்த்து, சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது.
ஒற்றுமை என்ற பெயரை வைத்துக் கொண்டு அ.தி.மு.க., செல்வாக்கிற்கு பின்னடைவை ஏற்படுத்துவோருக்கு, ஜெயலலிதாவின் ஆன்மா தோல்வியை தரும். பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தை மடைமாற்றவே, 'அவரை சந்தித்தனர்; இவரை சந்தித்தனர்' என செய்தி வருகிறது.
ஆனால், அந்த அமித் ஷாவே பழனிசாமி வீட்டில் விருந்து சாப்பிட்டு, 'பழனிசாமி தலைமையில் ஜெ., ஆட்சி மீண்டும் மலரும்' என கூறிவிட்டு சென்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.