ADDED : ஜன 21, 2024 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அருகே கோவிலுக்கு சென்றவர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஊரணி தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன் மனைவி புஷ்பா, 45; இவர், நேற்று முன்தினம் காலை 11:30 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு செஞ்சியில் உள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றார்.
மதியம் 2:30 மணிக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோவில் இருந்த 2.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 54 கிராம் தங்க நகைகள், 150 கிராம் வெள்ளி நகைகள், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது.
புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

