வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் ஜன.28 வரை 'ஹவுஸ் புல்'
வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் ஜன.28 வரை 'ஹவுஸ் புல்'
ADDED : ஜன 14, 2024 12:53 AM
சென்னை:சென்னை - திருநெல்வேலி, கோவை வந்தே பாரத் ரயில்களில் ஜன. 28ம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ரயிலில் இரண்டு நாட்களுக்கும் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன.
இதுகுறித்து ரயில் பயணியர் கூறியதாவது:
தென்மாவட்டங்களுக்கு வழக்கமாக இரவில் பயணத்தை துவங்கி மறுநாள் காலையில் தான் செல்வோம். ஆனால் இந்த ஆண்டு வந்தே பாரத் ரயில்களில் அதிகாலையில் புறப்பட்டு மதியம் 2:00 மணிக்குள் திருநெல்வேலி நாகர்கோவில் போன்ற நகரங்களுக்கு செல்வது புதிய அனுபவத்தை தருகிறது. அதிர்வு இன்றி சொகுசாகபயணம் செய்ய முடிகிறது. ஆம்னி பஸ்களை ஒப்பிடுகையில் வந்தே பாரத் ரயில் பயணம் சிறப்பாகவே இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில் 'பயணியரின் தேவை அதிகமாக உள்ள வழித்தடங்களில் சிறப்பு ரயில்களும் வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வேயில் அடுத்த ஆண்டில் கூடுதல் வந்தே பாரத் ரயில்களின் சேவை கிடைக்கும்' என்றனர்.

