'40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயங்க மாட்டோம்'
'40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயங்க மாட்டோம்'
ADDED : ஜன 23, 2024 11:21 PM

சென்னை:கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தமிழகம், புதுசேரி மாநில நிர்வாகக் குழு, செயற்குழு கூட்டம் இரண்டு நாட்களாக, சென்னையில் நடந்தது.
கட்சி தலைவர் கமல் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து, மாநில துணைத்தலைவர் மவுரியா அளித்த பேட்டி:
கட்சியின், 7ம் ஆண்டு துவக்க விழாவை பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. கட்சியின் பொதுக்குழு பிப்.,யில் கூட உள்ளது. மாற்றுத்திறனாளிகள் அணி புதிதாக துவங்கப்படுகிறது. மண்டல வாரியாக பேரிடர் மீட்புக் குழு ஏற்படுத்தப்பட உள்ளது.
லோக்சபா தேர்தலில், தமிழக வளர்ச்சி, மக்கள் நலன்களில் எந்த சமரசமும் அனுமதிக்க முடியாது; எங்கள் தலைவரின் சிந்தனை, கொள்கையோடு ஒத்துப்போக வேண்டும் என்ற இரு நிபந்தனைகள் அடிப்படையில் கூட்டணி அமையும்.
இந்த நிபந்தனைகளுக்கு ஒத்து வராவிட்டால், 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

