ADDED : செப் 17, 2025 11:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வருமான வரி தாக்கல் செய்த பின், பணத்தை திரும்பப் பெறுவது, நீங்கள் தாக்கல் செய்த அறிக்கையை 'இ- - சரிபார்ப்பு' செய்த பின்னரே துவங்கும். பொதுவாக, இ -- சரிபார்ப்பு முடிந்த நான்கு முதல் ஐந்து வாரங்களுக்குள், பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு திரும்பச் செலுத்தப்படும்.
இந்தக் காலத்திற்குள் பணம் வரவில்லையென்றால், நீங்கள் தாக்கல் செய்த அறிக்கையில் ஏதேனும் தவறுகள் இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். மேலும், வருமான வரித் துறையிலிருந்து அனுப்பப்பட்ட அறிவிப்புகள் அல்லது நோட்டீஸ்களை ஆய்வு செய்வது, அல்லது வருமான வரி 'இ--பைலிங்' போர்ட்டலில் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறும் நிலையை கண்காணிப்பதும் முக்கியம்.

