எம்கியூ 9பி ட்ரோன்களை இந்தியாவிற்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்
எம்கியூ 9பி ட்ரோன்களை இந்தியாவிற்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்
UPDATED : பிப் 02, 2024 05:42 PM
ADDED : பிப் 02, 2024 01:41 PM

வாஷிங்டன்: சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்பில் எம்கியூ 9பி சீகார்டியன் ட்ரோன்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த 4 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட இந்த ஒப்பந்தப்படி, இந்தியாவிற்கு 31 ட்ரோன்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. அதில் 15 ட்ரோன்கள் கடற்படைக்கு இணைக்கப்படும். இந்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க பார்லிமென்டில் ஜோ பைடன் அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது 31 எம்கியூ 9 பி ட்ரோன்கள் வாங்க இந்தியா ஆர்வம் காட்டியது. அதற்கு ஜோபைடன் அரசும் ஒப்புதல் கொடுத்தது.
ஆயுதப்படைகள் பயன்படுத்தும் இந்த ட்ரோன்கள், இடைவிடாது 40 மணி நேரம் அனைத்து காலநிலைகளிலும் பறக்கும் திறன் கொண்டது. சிவில் வான்வெளியில் பாதுகாப்பாக ஊடுருவும் திறன் கொண்டது. எதிரி இலக்கு எங்கு மறைந்திருந்தாலும் குறி தவறாமல் அழிக்கும் வல்லமை கொண்டவை. தொலைவில் இருந்தே துல்லியமாக படங்களை எடுக்கும். சத்தமே இன்றி தாழ்வாக பறந்து குண்டுவீசி அழிக்கும் திறன் பெற்றது.

