ADDED : செப் 11, 2025 02:23 AM
கெய்ரோ:ஒத்துழைப்பை புதுப்பிக்கும் வகையில் மேற்காசிய நாடான ஈரான் சர்வதேச அணுசக்தி முகமையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரானுடன் கடந்த ஜூனில் இஸ்ரேல் 12 நாள் போரில் ஈடுபட்டது. அப்போது இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானின் அணுசக்தி தளங்களைத் தாக்கின. இதையடுத்து ஈரான் அதிபர் பெசஷ்கியான், ஜூலை 2ல், சர்வதேச அணுசக்தி முகமையுடன் அனைத்து ஒத்துழைப்பையும் நிறுத்தி வைக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டார்.
இந்நிலையில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, எகிப்தின் வெளியுறவு அமைச்சர் பாடர் அப்டெலட்டி மற்றும் சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ரபேல் கிரோசி ஆகியோர் நேற்று எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் ஈரானும் சர்வதேச அணுசக்தி நிறுவனமும் ஒத்துழைப்பை புதுப்பிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.