பிரபல லபுபு பொம்மை ஒரு கோடியே 28 லட்சத்திற்கு ஏலம்
பிரபல லபுபு பொம்மை ஒரு கோடியே 28 லட்சத்திற்கு ஏலம்
UPDATED : ஜூன் 12, 2025 02:05 PM
ADDED : ஜூன் 12, 2025 01:54 PM

பெய்ஜிங்: குழந்தைகளை ஈர்க்கும் பிரபல லபுபு (Labubu) பொம்மை ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய் பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் ஹாங்காங்கில் பிறந்த கலைஞர் கேசிங் லங். இவர் எழுதிய, நோர்டிக் நாட்டுப்புறக் கதைகளால் ஈர்க்கப்பட்ட, விசித்திரக் கதை படப் புத்தகத் தொடரான தி மான்ஸ்டர்ஸின் நட்சத்திர கதாபாத்திரம் லபுபு. அகன்ற கண்கள், முயல் போன்ற காதுகளுடன், சிரிக்கும் பற்கள் என குழந்தைகளை வெகுவாக கவரும். மேற்கத்திய நாடுகளில் இந்த பொம்மை மிக பிரபலம்.
இந்நிலையில் ஏறக்குறைய 4 அடி உயரம் உள்ள லபுபு பொம்மையை Bloomberg நிறுவனம் ஏலமிட்டது. இதில் பல நாடுகளை சேர்ந்தவர்கள் ஆன்லைன் மூலமும் பங்கேற்றனர். இறுதியில் இந்த பொம்மை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 324 டாலருக்கு ஏலம் போனது. இந்திய மதிப்பு ரூ.1,28,65,695. உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போனது இந்த லபுபு பொம்மை தான் என்கிறது இந்த ஏலத்தை நடத்திய நிறுவனம்.

