'என் சாக்லேட்டை திருடிட்டாங்க'; சினிமாவுக்கு வரி விதித்தார் டிரம்ப்
'என் சாக்லேட்டை திருடிட்டாங்க'; சினிமாவுக்கு வரி விதித்தார் டிரம்ப்
ADDED : செப் 30, 2025 08:30 AM

நியூயார்க்; அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100% வரி விதிக்கப்படும் என்று கூறி அதிபர் டொனால்டு டிரம்ப், உலக சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
அமெரிக்க அதிபராக இந்தாண்டு ஜன.,ல் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், உலக நாடுகள் மீது இறக்குமதி வரிகளை விதித்து வருகிறார். இதைத் தவிர, பல பொருட்களுக்கான வரிகளை கடுமையாக உயர்த்தி உள்ளார்.
இந்நிலையில் டிரம்ப் நேற்று கூறியுள்ளதாவது:
அமெரிக்காவின் சினிமா தயாரிப்பு தொழில், பிற நாடுகளால் பறிக்கப்பட்டுள்ளது. இது குழந்தையின் கைக்குள் இருக்கும் மிட்டாயை திருடுவது போலத்தான் உள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்படாத திரைப்படங்களுக்கு, 100 சதவீதம் வரி விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்திய படங்களுக்கான வெளிநாட்டு பாக்ஸ் ஆபிசில் அமெரிக்கா 40 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. புதிய விதிகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டால் டிக்கெட் விலைகள் மற்றும் விநியோகச் செலவுகள் இரட்டிப்பாகும். இதனால் நடுத்தர மற்றும் சிறிய பட்ஜெட் படங்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும்.

