/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
செந்தமிழ்ப்பேரவை சார்பில் நீர் மோர், செடிகள் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

ஏப் 14, 2024

மயூர் விகார் பேஸ் 3யில் உள்ள செந்தமிழ்ப்பேரவையின் சார்பில் இன்று சித்திரை மாதம் 1 ம் தேதி (14 .4 2024) ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணி முதல் மயூர் விஹார் பேஸ் 3 உள்ள குருத்வாரா அருகில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நீர் மோர் பந்தல் மற்றும் இலவச செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைவர் மாரி தலைமை தாங்கினார் செயலாளர் S சரவணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் G.S விஜயகுமார் GM ONGC , ESG பிரகாசம், தமிழ் ஆசிரியை முத்துலட்சுமி மாரி கலந்துகொண்டு விழாவினை துவக்கி வைத்தார்கள்.
நிகழ்ச்சியில் இயற்கையை பாதுகாக்கும் விதம் 300 நபர்களுக்கு வாழைமரம் வேங்கை மரம் ரோஜாசெடி, கற்றாழை, மல்லிகை பூச்செடி, கருவேப்பிலை மற்றும் துளசி செடிகள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. 2000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நீர்மோர் மற்றும் சுண்டல் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை துணை தலைவர் A M ஆறுமுகம், இணை செயலாளர் K செல்வக்குமார் , துணை பொருளாளர் ரவிக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் அருள் செல்வம் , தங்கராஜா. வெங்கடாசலபதி, ராஜரத்தினம் செய்திருந்தினர்.