/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
ஸ்ரீ சிவன் சார் யோக சபை மகா கும்பாபிஷேகம்
/
ஸ்ரீ சிவன் சார் யோக சபை மகா கும்பாபிஷேகம்
பிப் 26, 2025

ஆத்மஞானி ஸ்ரீ சிவன் சார், காஞ்சி மகாஸ்வாமியின் பூர்வாஸ்ரம சகோதரர். அவருக்கு சென்னை நங்கநல்லூரில் ஸ்ரீ சிவன் சார் யோக சபை என்ற பெயரில் கோயில் எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள சரித்திரப் பிரசித்தி பெற்ற கர்ஜுராபுரி திருத்தலத்தில் (ஈச்சங்குடி கிராமம்) ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகளுக்கும் மகாலட்சுமி அம்மையாருக்கும் நான்காவது மகனாக குரோதி ஆண்டில் புரட்டாசி மாதம் புஷ்ய நட்சத்திரத்தில் (1904-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 3-ம் நாள்) ஸ்ரீ சிவன் சார் அவதரித்தார்.
பிரம்மஸ்ரீ சதாசிவ சாஸ்திரிகள், குடும்பத்தினரால் சாச்சு என்று அழைக்கப்பட்டார். அவரது பக்தர்கள் சிவன் சார் என்றே அழைத்தனர். (SAR - Sivan Always Remain) சிவன் சாரின் அவதாரம் குறித்து, 'சுடர்ஜோதி ஸ்வயம் பிரகாசமான ஆனபிரான் அருட் போராள் இவண் அகிலம் வந்தோன்' என்று ஒரு பழந்தமிழ் ஓலைச் சுவடியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோக சபையின் கும்பாபிஷேகம் பிப்ரவரி 2, 2025 அன்று காலை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து, தினமும் மாலை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
24 பிப்ரவரி மாலை, புகழ்பெற்ற சர்வதேச கலைஞர் விசில் வழிகாட்டி டாக்டர் சிவ பிரசாத் மற்றும் அவரது குழுவினரின் கர்நாடக இசைக்கச்சேரி நடைபெற்றது. பாலகிருஷ்ணன் (வயலின்), சத்தியமூர்த்தி (மிருதங்கம்), லக்ஷ்மிபதி (கடம்), ராமானுஜம் (மோர்சிங்) மற்றும் பிரசாந்த் (கஞ்சிரா) பக்க வாத்தியங்கள் வாசித்து கச்சேரியை மேலும் சிறப்பித்தனர். இசை ஆர்வலர்கள் இதில் திரளாக கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்