புதுச்சேரி டி.ஜி.பி., அலுவலகம் அருகே தூய்மா வீதியில் சாலையில் உடைக்கப்பட்ட சிமெண்ட் கற்கள் பல மாதங்களாக அப்புறப்படுத்தாமல் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
பஞ்சாபில் கலப்பட பால் உற்பத்தி அதிகரித்து வருவதால் கால்நடைகளை வைத்து பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கலப்பட பால் உற்பத்திக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள் அமிர்தசரஸ் போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம் முன் திரண்டு பாலை வீதியில் கொட்டி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
ஐரோப்பிய நாடான நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்டு அந்நாட்டின் மிக உயரிய விருதான ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆப் மெரிட் என்ற விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார். இது அவர் பெறும் 32வது உலகளாவிய விருது. இடம்: ஒஸ்லோ.
நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 128வது மலர் கண்காட்சி துவங்கியது. இதில் தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாட்டை பாதுகாப்போம் என்ற கருப்பொருளில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகள், கலாசார சின்னங்கள், வரலாற்று பெருமைகள் உட்பட பல்வேறு சிறப்பு மலர் அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளன.
கோடை வெயிலில் வாடும் விலங்குகளை குளிர்விக்க சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஷவரில் குளித்து கும்மாளமிட்ட யானை.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.