சென்னை கொடுங்கையூரில் உள்ள ஸ்ரீ சாயி விவேகானந்தா வித்தியாலயா மேல்நிலைப்பள்ளியின் 22ஆம் ஆண்டு விழா நடந்தது. இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, எம்.ஜி.ஆர். பல்கலையின் துணைவேந்தர் கீதாலஷ்மி பரிசுகளை வழங்கினார். உடன் இடமிருந்து வலம்- பள்ளியின் துணை முதல்வர் சிசிலிகுட்டி, ஊடகவியலாளர் ஜோதிலட்சுமி, பள்ளியின் தாளாளர் தியாகராஜன் மற்றும் முதல்வர் சுந்தரதாஸ்.
திருவண்ணாமலையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தேரடி வீதியில் உள்ள பழக் கடையில், அதிகாரிகள் நடத்திய சோதனையில், கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி கல்வித்துறை சார்பில் இலவச பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் பெரிய குப்பம் பஸ் நிலையத்தில் உள்ள 2015 அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அம்மா உணவகம் திமுக ஆட்சியில் கண்டு கொள்ளாததால் பாழடைந்து காணப்படுகிறது
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த எம் எல் ஏ சுனில் ஆனந்த் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அருகில் தலைமையிட மருத்துவர் கார்த்திக் மகாராஜ் உள்ளிட்டோர் உள்ளனர்.