கவின்கேர் மற்றும் எபிலிட்டி பவுண்டேஷன் இணைந்து நடத்தும் 22 ஆம் ஆண்டு கவின்கேர் எபிலிட்டி விருதுகள் வழங்கும் விழா நடந்தது இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் மற்றும் மாறுபட்ட துறைகளையும் சேர்ந்த மாற்று திறனாளிகளின் சாதனைகளை போற்றி அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது இதில் இடமிருந்து எல்.வி பிரசாத் மீடியா கல்லூரியின் முன்னாள் துறைத் தலைவர் லதா முருகன், ஐ. ஏ .எஸ் அதிகாரி லட்சுமி, லெப்டினன்ட் ஜெனரல் அருண், சாய் பல்கலை முதல்வர் ரமணி, எபிலிடி பவுண்டேஷன் நிறுவனர் ஜெயஶ்ரீ, கவின்கெர் நிறுவன தலைவர் ரங்கநாதன், பாடலாசிரியர் மதன் கார்க்கி, டாடா கன்சல்டன்சி செயலாக்க துறை தலைவர் சுரேஷ் ராமன், தொழிலதிபர் பாலு, நடிகை ரேவதி மற்றும் விருது பெற்றவர்கள் வினாயனா குரானா, சோன்சின் ஆங்மோ, ஐஸ்வர்யா, வித்யா , டாக்டர் கேத்நா எல் மேத்தா.இடம் : சேத்துப்பட்டு.
திருப்பூர் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை அருகில், குப்பைகள் கொட்டி தடுப்புகள் வைத்து மறைத்திருந்தனர். காற்றில் தடுப்புகள் உடைந்துள்ளதால், குப்பைகள் ஆற்றில் கலந்து வருகிறது.
கோவை பெரியகடை வீதி மணிக்கூண்டு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் நடு ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்குவதால் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு வந்த பொதுச் செயலாளர் பழனிச்சாமி எம்.ஜி.ஆர்., சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
வடபழனி ஆண்டவர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெசில் ஏற்பட்டு வருகிறது.